தவெக தலைவர் விஜய்க்கும் ஆளுங்கட்சி திமுகவுக்கும் கடுமையான மோதல் நிலவி வருகிறது. விஜய் நடித்த லியோ தி கோட் போன்ற படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை நடத்த திமுக தரப்பில் செய்த நெருக்கடியால் அந்த படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே நடத்தவில்லை. இப்போது விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, அரசியல் சார்ந்த கருத்துக்கள் எதையும் பேசக்கூடாது என்று ஏற்கனவே மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளது. இப்போது மேலும் பல புதிய தடைகளை கெடுபிடிகளை மலேசிய போலீஸ் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வருபவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, அரசியல் சார்ந்த பதாகைகள், கட்சி சின்னம் பொறித்த தொப்பிகள் கைக்கடிகாரங்கள் பெல்ட்டுகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட எதையும் நிகழ்ச்சி திடலுக்குள் கொண்டு வரக் கூடாது என மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளது.
மேலும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்கும் பொருட்களை விழா அரங்க பகுதிக்குள் கொண்டுவரக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். தவெக கட்சி கொடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா போலீசின் கெடுபிடிகளால் அப்செட் ஆன நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் பேசாமல் சென்னையிலேயே இந்த விழாவை நடத்தியிருக்கலாமோ என்று புலம்பி வருகிறார்களாம்.
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…