Categories: சினிமா

அந்த நடிகர் என்ன காதலிச்சது உண்மை தான்.. ஆனா கடைசில.. பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை சொன்ன நடிகை லதா..

Spread the love

நடிகை லதா, எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்தவர். பல்லாண்டு வாழ்க, நினைத்ததை முடிப்பவன், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், நாளை நமதே, நேற்று இன்று நாளை என பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் எம்ஜிஆர் மூலம், தமிழ் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர் என்பதால், இவரது அருகில் நெருங்கவே பலரும் பயப்படுவர். நடிகர் நம்பியார் கூட, அவர் அருகே சென்று லதா சென்று அமர்ந்தால், கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்கம்மா என்று கிண்டல் செய்திருக்கிறார். அந்த அளவுக்கு எம்ஜிஆரின் கட்டுப்பாட்டில் இருந்தவர் நடிகை லதா. பெரும்பாலும் இவர் எம்ஜிஆர் படங்களில்தான் அதிகமாக நடித்தார். அவர் அரசியலுக்கு போன பிறகு, இவர் ரஜினி, கமல் போன்ற பிற நடிகர்களுடன் நடித்தார்.

இந்த சூழலில், ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த், லதாவை திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், அதனால் கோபமடைந்த எம்ஜிஆர், ரஜினியை ராமாவரம் தோட்டத்துக்கு வரவழைத்து சவுக்கால் அடித்ததாகவும் ஒரு தகவல் நீண்ட காலமாக உள்ளது. ஆனால், நடிகை லதாவே இதை ஒரு நேர்காணலில் மறுத்தும் இருக்கிறார். அப்படி எல்லாம் எதுவுமே நடக்கவில்லை. ரஜினி இனிமையான நண்பர். அவரது மனைவி லதா ரஜினிகாந்த் எனது குடும்ப நண்பராக இருக்கிறார். அவர் வீட்டு விசேஷத்தில் நானும், என் வீட்டு விசேஷத்தில் அவரும் கலந்துக்கொள்வார் என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இதைப்போன்ற ஒரு நேர்காணலில் நடிகை லதா கூறியதாவது, எம்ஜிஆர் மூலமாக நான் சினிமாவுக்குள் வந்ததால், நான் எந்த கிசுகிசுவிலும் சிக்கவில்லை. ஆனால் மலையாள நடிகர் ஜெயன் என்னிடம் பிரபோஸ் பண்ணினது உண்மைதான். ஒருமுறை தெலுங்கு மற்றும் மலையாளத்தில் லவ் இன் சிங்கப்பூர் அப்படீங்கற படத்துல நடிச்சேன். அதில் சிரஞ்சீவி, பிரேம் நசீர், ரங்கராஜ், ஜெயன் எல்லோரும் நடித்திருந்தனர். அப்போ, அவர் பிரபோஸ் செய்தார். சரி பார்க்கலாம் என அவரிடம் சொல்லி இருந்தேன். அதற்குள் அவர் ஒரு ஆக்ஸிடெண்டில் இறந்து விட்டார். மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் நடிகை லதா.

admin

Recent Posts

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

3 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

9 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

11 minutes ago

“ஒரே ஒரு ரோடு ஷோ… மொத்த சென்னையும் தட்டிதூக்கிய விஜய்”… தலைநகரில் தலைகீழாக மாறும் தேர்தல் களம்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…

18 minutes ago

பயங்கரம்!.. 10 மாத குழந்தையுடன் மனைவியை உயிரோடு எரிக்க முயன்ற கணவன்… அடுத்து காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியை உலுக்கிய கொடூரம்…!!!

தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…

20 minutes ago

கார்ப்பரேட் உலகை உலுக்கிய “வேட்டை”… டிசிஎஸ் பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த கொடூரம்… நாசிக் பிபிஓ-வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…

25 minutes ago