நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவர் மலையாள சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள். இப்போது நடிகர் பிரபாஸ் நடித்த தி ராஜா ஸாப் என்ற படத்தில் மாளவிகா மோகனன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் தி ராஜா ஸாப் பட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மாளவிகா மோகனன் கூறியதாவது, தி ராஜா ஸாப் படத்துக்கு முன்பாகவே பிரபாஸ் நடித்த சலார் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. மாஸ்டர் படத்திற்கு விஜய்க்கு ஜோடியாக நடித்த நிலையில் சலார் படத்தில் நடிப்பதற்காக அந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் எனக்கு போன் செய்து பேசினார்.
ஆனால் நான் அப்போது அந்தப் படத்தில் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அதற்குப் பிறகு மீண்டும் பிரபாஸூடன் இந்த படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. இதை எனக்கு கிடைத்த பெரிய பாக்கியமாக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
மாளவிகா மோகனன் சலார் படத்தில் நடிக்க நோ சொன்ன நிலையில், சலார் படத்தில் பிரபாஸூடன் ஸ்ருதிஹாசன் நடித்தார். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். ஒருவேளை சலார் படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தால் கூலி படத்திலும் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக மாளவிகா மோகனன் ரஜினியுடன் நடிக்க சான்ஸ் கிடைத்திருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…