நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்த திமுகவிற்கு, தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திடம் (தவெக) திமுக தனது ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. இந்தத் தேர்தலில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினே தோல்வியடைந்தது அக்கட்சியினரை நிலை குலையச் செய்துள்ளது. வெறும் 59 எம்.எல்.ஏக்களை மட்டுமே பெற்றுள்ள திமுகவில், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட 15 முக்கிய அமைச்சர்கள் வரை தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்தத் தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு வரவும், கட்சியை மறுசீரமைக்கவும் திமுக தலைமை தற்போது பல்வேறு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
மறுபுறம், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழல் திமுகவிற்கு மேலும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. முதல்வர் விஜய்க்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதுவரை திமுக கூட்டணியில் இருந்த விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெக அமைச்சரவையில் இணைந்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்க, காங்கிரஸ் கட்சியோ திமுக கூட்டணியை முற்றிலுமாக முறித்துக் கொண்டு தவெக ஆட்சியில் இரண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளது. தவெக அரசின் இந்த வேகமான நகர்வுகளை திமுகவின் கனிமொழி எம்.பி கடுமையாக விமர்சித்து வரும் வேளையில், கூட்டணியை இழந்து பலவீனமாகியுள்ள திமுகவிற்குள் இந்தச் சறுக்கல் குறித்து தீவிர ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்படியான ஒரு பரபரப்பான அரசியல் சூழலில்தான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு 5 நாள் பயணமாகச் சென்றுள்ளார். அவருடன் கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் சென்றுள்ளனர். கட்சித் தரப்பில் இது ஸ்டாலினின் ‘தனிப்பட்ட பயணம்’ என்று கூறப்பட்டாலும், ஜூன் 1-ம் தேதி அவர்கள் சென்னை திரும்ப உள்ள நிலையில், மைசூருவில் வைத்து திமுகவின் எதிர்காலம் குறித்த மிக முக்கிய ‘மேஜர் ஆபரேஷன்’ திட்டங்களை வகுக்கவே இந்த ரகசியப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் விஜய்யின் தவெகவிற்கு இருக்கும் அசுர வேகச் செல்வாக்கை எப்படி திமுக பக்கம் திருப்புவது என்பது குறித்தே மைசூருவில் முதன்மையாக விவாதிக்கப்பட உள்ளது. தவெகவிற்கு நிகராக திமுகவிலும் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் ‘செயல் தலைவர்’ பதவி வழங்குவது குறித்தும், பிற இளம் தலைவர்களுக்குக் கூடுதல் பொறுப்புகளைக் கொடுப்பது குறித்தும் இங்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனையின் விளைவாக, மைசூரு பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின் சென்னை திரும்பியவுடன், திமுகவில் மாவட்ட வாரியாகப் பெரிய அளவில் நிர்வாகப் பதவிகளில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…