மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) காலியாக உள்ள 9,175 கான்ஸ்டபிள் (டெக்னிக்கல்/ட்ரேட்ஸ்மேன்) பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓட்டுநர் பணிக்குக் கனரக ஓட்டுநர் உரிமமும், மெக்கானிக் மோட்டார் வாகனப் பணிக்குத் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழும், மற்ற பணிகளுக்கு அந்தந்த தொழிற்பிரிவில் போதிய முன்னனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01/01/2026 அன்று 21 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குச் சம்பள நிலை-3 இன் கீழ் மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை ஊதியம் வழங்கப்படும்.
தகுதியானவர்கள் கணினி வழி எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது; எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டண விலக்கு உண்டு. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மே 19-ஆம் தேதிக்குள் https://crpf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…