தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலமாக விடுபட்ட பெண்கள் அனைவரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமை தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த மகளிர் அனைவருக்கும் கண்டிப்பாக உரிமைத் தொகை கிடைக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படுவதாகவும் இந்த தொகை எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள இந்த தகவல் பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், 19 வயது வாலிபர் ஒருவர் அமைதியாக நடந்து சென்று…
சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆனந்தராஜ், தனது 22 வயது ஊழியர் கிரண் மற்றும் அவரது 19 வயது மகளைத் தனது…
கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…