கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துகோணத்தில் உள்ள யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம், தற்போது பல்வேறு திருப்பங்களுடன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டு முதல் யூடியூப்பில் இயங்கி வரும் மதுமிதா, தனது நகைகளையும் பணத்தையும் வீடியோக்களாக வெளியிட்டு 4 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்றவர். கடந்த 24-ம் தேதி நள்ளிரவு வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து நுழைந்த நபர்கள், வீட்டில் இருந்த 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாகப் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ராஜாக்கமங்கலம் காவல்துறையினர், இசக்கி பாண்டியன் உட்பட 4 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 98 சவரன் நகைகளை மீட்டுள்ளனர்.
இருப்பினும், கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் இந்த வழக்கின் விசாரணை இத்துடன் முடிவுக்கு வரவில்லை. மதுமிதா சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஆடம்பர வீடியோக்களைப் பார்த்துதான் கொள்ளையர்கள் திட்டமிட்டார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் கேள்விகளை எழுப்பியபோது, அவர் விசாரணையைப் பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், வீட்டில் கொள்ளை நடந்த சில நாட்களிலேயே தனது குழந்தையைப் பணத்தில் குளிப்பாட்டுவது போன்ற ரீல்ஸ்களை அவர் வழக்கம் போலப் பதிவிட்டது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. கொள்ளையடிக்கப்பட்டது 118 சவரன் நகை என்று மதுமிதா தரப்பில் கூறப்படும் நிலையில், கைதான கொள்ளையனோ மிகக் குறைந்த அளவிலான நகைகளையே எடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுமிதாவின் முந்தைய பின்னணியும் இந்த வழக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு ஸ்பாவில் சட்டவிரோதமாகச் செயல்பட்டதாக, அவர் மீது ஐ.டி.பி (ITP) சட்டத்தின் கீழ் வடசேரி காவல்நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, காவல்துறையினரின் சந்தேகப் பார்வை அவர் மீதும், அவரைச் சுற்றியுள்ள நெருங்கிய வட்டாரங்களின் மீதும் திரும்பியுள்ளது. இதனிடையே, வீட்டில் பெருமளவிலான நகைகள் மற்றும் ரொக்கம் வைத்திருந்தது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுமிதாவிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
தற்போது இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வெளிப்புறக் கொள்ளையர்களின் கைவரிசை மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்ற பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையிலேயே கொள்ளை போன நகைகளின் அளவு எவ்வளவு, இதன் பின்னணியில் யார் செயல்பட்டுள்ளார்கள் என்பது விரைவில் தெரியவரும் என கன்னியாகுமரி டி.எஸ்.பி பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொள்ளையர்கள் பிடிபட்ட போதிலும், மதுமிதாவைச் சுற்றியுள்ள சந்தேக வளையங்கள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து புகையச் செய்துள்ளன.
சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆனந்தராஜ், தனது 22 வயது ஊழியர் கிரண் மற்றும் அவரது 19 வயது மகளைத் தனது…
கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…