சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிலையில் சுமார் 12 வருடங்கள் கழித்து நேற்று வெளியானது. சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் நேற்று திரைப்படம் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மனோபாலா மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று பிரமாண்டமாக வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ கொடுத்துள்ளார்.
அதில், 12 வருடங்களுக்கு முன்பு எடுத்த இந்த படமே நல்லா இருக்கு. ஆனால் சமீப காலமாக படங்கள் என்ற பெயர்களில் பல குப்பை படங்களை எடுத்து வருகிறார்கள். 60 சீனியில் அனைத்தும் நல்லா இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். நறுக்கென ஒரு நாலு சீன் நல்லா இருந்தா போதாதா? நறுக்குன்னு நாலு சீன் இந்த படத்தில் தாராளமாகவே இருக்கு. வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலி என இரண்டு ஹீரோயின்களையும் எந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு சுந்தர் சி கிளாமராக இந்த படத்தில் காட்டியுள்ளார்.
குழந்தைகளுடன் படத்தை பார்க்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஓடிடியில் பல ஏ சான்றிதழ் படங்களே நடு வீட்டில் ஓடிவரும் நிலையில் இந்த படத்தை தாராளமாக திரையரங்குகளில் பார்க்கலாம். சந்தானத்தின் டைமிங் பஞ்ச் காமெடி எல்லாம் ரசிகர்கள் இப்போ ரொம்பவே மிஸ் பண்றாங்க. இந்தப் படம் விஷால் படமா அல்லது சந்தானம் படமா என யோசிக்க வைக்கும் அளவுக்கு காமெடி சூப்பராக இருப்பது தான் இந்த படத்தை நல்லா இருக்கு என்று சொல்ல முக்கிய காரணம். குடும்பத்துடன் பார்ப்பதற்கு சிறந்த படம்.
விஜய் ஆண்டனி இந்தப் படத்துக்கு போட்டதை போலவே பாடல்களை போட்டு இசையமைப்பாளராகவே இருந்திருக்கலாம் என்று ப்ளூ சட்டை மாறன் மதகஜராஜா படத்தை பாராட்டியுள்ளார். வழக்கமாக படங்களை தொடர்ந்து குறை சொல்ல வரும் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்திற்கு நல்ல விதமாக சர்டிபிகேட் கொடுத்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…