தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் மற்றும் சந்தானம் உள்ளிட்டோ நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மதகஜராஜா. சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 வருடங்கள் கழித்து படம் நேற்று முன்தினம் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தில் விஷால் மற்றும் சந்தானத்துடன் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மறைந்த நடிகர்கள் மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். 12 வருடங்களுக்குப் பிறகு படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் படம் பேரதரவை பெற்று வருகிறது. விஷாலின் மதகஜராஜா படம் முதல் நாளில் சிறப்பான ஓப்பனிங் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் இந்த பொங்கல் வின்னரே மதகஜராஜா திரைப்படம் தான் எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன. சமீபத்தில் நடிகர் விஷாலின் உடல்நலம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து அவரை தீவிர நோயாளியாக சித்தரித்த நிலையில் தனக்கு இருந்தது வெறும் வைரல் காய்ச்சல் மட்டும் தான் என்றும் தற்போது நான் நலமுடன் இருக்கிறேன் என்றும் மீண்டு வந்து விஷால் பதிலடி கொடுத்திருந்தார்.
இரண்டு மணி நேரம் படம் போறதே தெரியவில்லை லாஜிக் இல்லை என்றாலும் காசு கொடுத்து படத்துக்கு போகும் ரசிகர்களை சிரிக்க வைத்து அனுப்புவதே சிறப்பான விஷயம் என படத்தை பலரும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். படத்தில் இடம்பெற்ற விஜய் ஆண்டனியின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்க முதல் நாள் 3.2 கோடி வசூல் செய்த இந்தப்படம் உலகளவில் 7 நாட்களில் இதுவரை உலகளவில் ரூ. 39 கோடி வசூல் செய்துள்ளது
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…