அடுத்த சர்ச்சை..! “ஒல்லியா இருந்தா முருங்கைக்காய்.. குண்டா இருந்தா பூசணிக்காய்” பெண் நிர்வாகிகளை மேடையிலேயே கேலி செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!!

Spread the love

 கரூர் தலைமை தபால் நிலையம் அருகே அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெண்கள் குறித்துப் பேசிய விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு திரண்டிருந்த பெண் நிர்வாகிகளைப் பார்த்து, “ஒல்லியாக இருப்பது முருங்கைக்காய்… குண்டாக இருப்பது பூசணிக்காய்” என்று உடல் அமைப்பை வைத்து ஏளனம் செய்ததோடு, அவர்களை ஒருமையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராட வேண்டிய இடத்தில், ஒரு முன்னாள் அமைச்சர் பெண் நிர்வாகிகளை இழிவுபடுத்தும் வகையில் சைகை காட்டிப் பேசியது அங்கிருந்த பெண்கள் மத்தியில் பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பெண்களைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகை நயன்தாரா குறித்துத் தனது விருப்பத்தை வெளிப்படையாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார். அதேபோல், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பொதுக்கூட்டத்தில், “பெண்களுக்குச் சேலை வழங்கினால், அவர்கள் பாவாடை கேட்கிறார்கள்” என்று ஆபாசமான தொனியில் பேசியது கடும் கண்டனத்திற்குள்ளானது. தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அதே பாணியில் பெண்களின் உடல்வாகு குறித்துப் பேசியிருப்பது, அக்கட்சியின் மூத்த தலைவர்களின் தரம் தாழ்ந்த அரசியல் கலாச்சாரத்தையே காட்டுவதாக விமர்சனங்கள் எழுகின்றன.

பெண்களை வெறும் காட்சிப் பொருளாகவும், கிண்டலுக்குரியவர்களாகவும் கருதும் இத்தகைய போக்கிற்குப் பல்வேறு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அரசியலில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டிய தலைவர்களே, பொது மேடைகளில் அவர்களை அவமானப்படுத்துவது வேதனைக்குரியது எனச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், பெண்களை இழிவுபடுத்தும் முன்னாள் அமைச்சர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Soundarya

Recent Posts

“ஒரு இயக்கம்.. இன்னொரு சின்னத்துல நிக்கவே கூடாது..!” – திமுகவை நேரடியாக அட்டாக் செய்த துரை வைகோ…!

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவின் கருத்து அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…

2 minutes ago

“பிளாஸ்டிக் குப்பைக்கு குட்-பை..! இந்தியாவில் முதல்முறையாக ‘மக்கும் பால் பாக்கெட்’… மதர் டெய்ரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி முடிவு…!”

இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…

6 minutes ago

“நெருங்காதே”.. முதலிரவில் கட்டாயப்படுத்திய கணவன்… மணமகள் கொடுத்த ‘பளார்’ அடி.. இருவீட்டார் மோதலில் மணமகனுக்கு நேர்ந்த பயங்கரம்.. பரபரப்பு பின்னணி..!!

திருமணமான முதல் இரவே போர்க்களமாக மாறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில்…

11 minutes ago

ஆசை யாரைவிட்டது..? ₹20 மாம்பழ ஆசை… “மாம்பழமும் போச்சு… மானமும் போச்சு” ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணியை வெளுத்தெடுத்த தோட்டத்துக்காரர் – நெட்டிசன்கள் கிண்டல்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…

12 minutes ago

“நெஞ்சே நடுங்கிடுச்சு.. ஒன்றல்ல, இரண்டல்ல.. அடுத்தடுத்து வந்த நாகப்பாம்பு.. தெறித்து ஓடிய விவசாயி.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!!

ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…

21 minutes ago

“காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லையா..?” அரசு மருத்துவமனையில் போலீஸ் அதிகாரியை பளார் என அறைந்த போதை வாலிபர்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…

25 minutes ago