அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சகோலா கடற்கரையில் நடைபெற்ற வான்வழிச் சாகச நிகழ்ச்சிக்கு முந்தையப் பயிற்சியின்போது, அமெரிக்கக் கடற்படையின் “ப்ளூ ஏஞ்சல்ஸ்” பிரிவைச் சேர்ந்த எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானம் ஒன்று விதியை மீறி மிகத் தாழ்வான உயரத்தில் அதிவேகமாகப் பறந்துள்ளது. அப்போது விமானத்திலிருந்து வெளியேறிய அதீத காற்றின் வேகம் மற்றும் அழுத்தத்தின் காரணமாகக் கடற்கரையில் மக்கள் அமைத்திருந்த குடைகள், தற்காலிகக் கூடாரங்கள் மற்றும் நாற்காலிகள் அனைத்தும் காற்றில் பறந்து சிதறின. இந்தத் திடுக்கிடும் சம்பவத்தைக் கண்டு கடற்கரையில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அலறியடித்துக்கொண்டு தங்களின் உடைமைகளைப் பாதுகாக்க ஓடிய வீடியோ தற்போது இணையத்தில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
திடீரெனப் பின்னால் இருந்து தாழ்வான உயரத்தில் வந்து மக்களை வியப்பிலாழ்த்தும் “ஸ்நீக் பாஸ்” என்ற சாகச முறையை அந்தப் போர் விமானம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. எனினும், வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகளை விடவும் மிகக் குறைந்த உயரத்தில் விமானம் இயக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ள கடற்படைத் தலைமை, இச்சம்பவம் குறித்துத் தீவிரப் பாதுகாப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபரீத நிகழ்வில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், பார்வையாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கக் கடற்படை மற்றும் மத்திய விமான போக்குவரத்து அமைப்பின் (FAA) விதிகளின்படி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…