ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிய காதலர்கள்…. நள்ளிரவில் வந்த போன் கால்…. கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

சென்னை மாவட்டம் அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த த்ரிஷா(20) துணிக்கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் வேலை பார்க்கும் ராபின்(22) என்பவருடன் திரிஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. நேற்று வேப்பேரி சர்ச் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ராபினும் த்ரிஷாவும் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அறையை பூட்டிவிட்டு ராபின் வெளியே சென்று விட்டார். இதனை தொடர்ந்து நள்ளிரவு நேரம் விடுதியின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அறை எண் 103-ல் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக மர்ம நபர் கூறியுள்ளார்.

இது குறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை திறந்து பார்த்த போது திரிஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் ராபின் வெளியே சென்று விட்டு மீண்டும் அறைக்கு வந்தார். அப்போது திரிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் த்ரிஷாவின் தோழி சுவேதா என்பவருக்கு வாட்ஸ் அப் மூலமாக தகவல் தெரிவித்துவிட்டு ராபின் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

2 மணத்தியாலங்கள் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

3 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

3 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

3 மணத்தியாலங்கள் ago