“13 ஆண்டு காதல்… ஒரு நிச்சயதார்த்தம்… இரண்டு கொலைகள்!” – தஞ்சையை உலுக்கிய பழிக்குப் பழி சம்பவம்…!

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் காதல் விவகாரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு கொடூர கொலைச் சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கியுள்ளன. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேலக்கழக்குடி கிராமத்தைச் சேர்ந்த காவியா என்ற 26 வயது தற்காலிக ஆசிரியை, அஜித்குமார் என்பவரை கடந்த 13 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காவியாவின் பெற்றோர் அவருக்கு வேறொரு நபருடன் திருமண நிச்சயம் செய்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்த அஜித்குமார், கடந்த நவம்பர் மாதம் ஆசிரியை காவியா பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து, ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித்குமார், சிறையில் அடைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தன் மகளை இழந்த துயரத்திலும் ஆத்திரத்திலும் இருந்த காவியாவின் தந்தை புண்ணியமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள், அஜித்குமாரைப் பழிவாங்கச் சரியான தருணத்திற்காகக் காத்திருந்ததாகத் தெரிகிறது. ஜாமீனில் வந்த அஜித்குமார் வீட்டில் இருப்பதை அறிந்த அவர்கள், இந்த விபரீத முடிவைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை அஜித்குமார் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, காவியாவின் தந்தை உட்பட நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். தப்பியோட முயன்ற அஜித்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இதில் பலத்த காயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ஒரு கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்ட இந்த இரண்டாவது கொலைச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு, காவியாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் நால்வரும் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் நேரடியாகச் சென்று சரணடைந்தனர். அவர்களைக் கைது செய்த போலீசார், தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலால் தொடங்கிய ஒரு உறவு, முதலில் ஆசிரியை கொலையிலும், பின்னர் அதற்குப் பழிவாங்கக் காதலன் கொலையிலும் முடிந்துள்ள இந்தத் துயரச் சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

5 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

5 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

5 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

5 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

5 மணத்தியாலங்கள் ago