சில தினங்களுக்கு முன்பு இந்தியாவின் உயரிய விரதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. கலை, சமூக பணி, அறிவியல், பொறியியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு இந்த பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் அஜித்குமார், செஃப் தாமு, நடிகை ஷோபனா போன்ற பலருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட ஒருவர்தான் கிரிக்கெட் வீரர் அஸ்வின். அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருந்து பத்மஸ்ரீ விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் விஜய் டிவியில் பிரபலமாக இருந்த லொள்ளு சபா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈஸ்டர் என்பவர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்ததற்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்று இனி பார்ப்போம்.
லொள்ளு சபா ஈஸ்டர் கூறியது என்னவென்றால் அழுகிற குழந்தையிடம் சாப்பாட்டை புடுங்கி விட்டு சாக்லேட்டை கொடுப்பது போல் இருந்தது அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருதை கொடுப்பது. அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்று கூறியவுடன் அவரை முறையாக நிம்மதியாக கூட ஓய்வு பெற விடவில்லை. அவரை அங்கும் இங்கும் அலக்கழித்தார்கள் அவமானப்படுத்தினார்கள். அவ்வளவும் பண்ணிவிட்டு இப்போது எதுக்கு அவருக்கு பத்மஸ்ரீ விருதை தூக்கி தர வேண்டும் என்று ஆதங்கத்துடன் கோபத்துடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார் லொள்ளு சபா ஈஸ்டர்.
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…