விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்றது. லொள்ளு சபா மறக்க முடியாத நகைச்சுவை தொடர். இந்த தொடரில் இருந்து தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் என்று சொல்லப்படும் பல நட்சத்திரங்கள் வந்திருக்கின்றன. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் வெளியான நகைச்சுவை தொடர் தான் லொள்ளு சபா. இந்தத் தொடரில் சந்தானம், சுவாமிநாதன், ஜீவா, மாறன், பாலாஜி, மனோகர் மற்றும் ஜாங்கிரி மதுமிதா போன்ற எண்ணற்ற நடிகர்கள் பங்கேற்று இருந்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் தங்களது வாழ்க்கையை தொடங்கிய இவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக சந்தானம், பாலாஜி மற்றும் மனோகர் உள்ளிட்ட நடிகர்கள் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி தொடர்களையும் திரைப்படங்களையும் கேலி செய்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தது. அப்படி இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஈஸ்டர். இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த இவர் சமீப காலமாக எந்த படங்களிலும் காண முடிவதில்லை. காரணம் இவர் தன் குடும்பத்தோடு அயர்லாந்தில் செட்டில் ஆகிவிட்டார். இப்படியான நிலையில் இவர் தனது குடும்பத்தோடு அயர்லாந்தில் இருந்து கொண்டு பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், என்னுடைய மனைவியை ஜமுனா ராணி அயர்லாந்தில் அரசு வேலையில் இருக்கின்றார். எனக்கு என் அப்பாவை போலவே இடையில் திடீரென மாரடைப்பு வந்து ஆப்ரேஷன் செய்யப்பட்டதால் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். அப்போது எனது இரண்டு மகள்களையும் என்னையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஜமுனா ராணிக்கு வந்ததால் அவரே அதனை ஏற்றுக் கொண்டார். அவருக்கு அயர்லாந்தியில் வேலை கிடைக்க இங்கு வந்து சில காலம் எங்களை விட்டு வேலை பார்த்தார். கொரோனா காலத்தில் நாங்கள் இவரை சந்திக்க வந்திருந்த போது எனது இரண்டு மகள்களுக்கும் இங்கேயே பள்ளியில் அட்மிஷன் போட்டுவிட்டு எங்களை பிடித்து லாக் செய்து விட்டார். தற்போது இங்கே இரண்டு கோடியில் ஒரு வீடு வாங்கி வசித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவுடன் ஒப்பிடும்போது இங்கு இருக்கக்கூடிய பணத்தின் மதிப்பு அதிகம் தான். இந்த நாட்டை பொறுத்தவரை எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்து விட்டு அதனை இங்கேயே செலவு செய்ய வேண்டும். முடிந்த அளவிற்கு அரசாங்கம் நமக்கு உதவி செய்வாங்க. நான் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது என்னுடைய ஒரு நாள் சம்பளம் 750 ரூபாய் தான். அதன் பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு நடிகரானந்தம் முதன் முதலில் ஒரு விளம்பர படத்திற்கு நடிக்கும் போது ஒரே நாளில் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. இதையே நான் மிகப்பெரிய வளர்ச்சியாக தான் பார்த்தேன். என்னுடைய அப்பாவும் சினிமா துறையில் இருந்ததால் நானும் அப்படியே நாடகங்களில் நடிக்க தொடங்கி பிறகு லொள்ளு சபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானேன். தற்போது அயர்லாந்தில் குடும்பத்தோடு செட்டிலாகி விட்டதால் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். வெக்கேஷன் டைமுக்கு மட்டும் இந்தியாவிற்கு வந்து செல்வோம்.
அதேசமயம் இங்கு செட்டில் ஆகிவிட்டதால் நான் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கிடையாது. பட வாய்ப்புகள் வந்தால் கட்டாயம் நடிப்பேன். கமல்ஹாசன் நடித்த சலங்கை ஒலி திரைப்படத்தை கிண்டல் பண்ணி நான் நிகழ்ச்சியில் பண்ணதும் நிறைய பேர் என்ன திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. கத்தியை காட்டி கூட மிரட்டுனாங்க. ஒருநாள் என்னுடைய நண்பர்களுடன் வெளியில் சென்று இருந்த போது தனியா ஏதோ வாங்க சென்றபோது என்னை 10 பேர் சுத்து போட்டுட்டாங்க. நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா எங்களோட தலைவனையே கலாய்ப்பியா என்று திட்டி அடிக்க வந்துட்டாங்க. பிறகு என் நண்பர்கள்தான் அவங்க கிட்ட இருந்து காப்பாற்றினார்கள். அந்தப் படத்தை நான் காமெடியா பண்ணதால நிறைய பேருக்கு என் மேல கோபம் இருந்துச்சு. பிறகு காலப்போக்கில் அதுவே சரியாகிவிட்டது என்று ஈஸ்டர் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…