Categories: சினிமா

“தலைவர் முதல் தல வரை”.. காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்த பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!

Spread the love

இந்தியாவின் ஜனநாயக தேர்தலாக பார்க்கப்படும் மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவானது இன்று தமிழகத்தில் காலை தொடங்கியது. காலை 7:00 மணி முதல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கி வரும் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெறும் என்றும், முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி என்று மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இன்று காலை 7:00 மணி முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கை செலுத்தி வருகிறார்கள்.

இன்று காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முதல் ஆளாக நடிகர் அஜித்குமார் 6:40 மணிக்கு திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து தன்னுடைய வாக்கை செலுத்தி சென்றார்.

அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் தனது வாக்கை செலுத்தினார். நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சென்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தி இருந்தார்.

நடிகர் ராதிகா மற்றும் சரத்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தி இருந்தார்கள். நடிகர் தனுஷ் சென்னை டிடிகே சாலையில் உள்ள செயின் சேவியர் பள்ளியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.

 

பல பிரபலங்கள் தொடர்ந்து வாக்குகள் செலுத்தி வரும் நிலையில் அவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

#image_title

Mahalakshmi

Recent Posts

முடிவுக்கு வராத கொடூரம்… ஜெம் வீரமணி மீது பாய்ந்த 8-வது வழக்கு… சிறைக்குள்ளும் குறையாத சிக்கல்… வெளியான பகீர் வாக்குமூலம்…!!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…

8 மணத்தியாலங்கள் ago

பலே கில்லாடி!.. ரூ.37 லட்சம் கள்ள நோட்டு… கலர் ஜெராக்ஸா? ஒரிஜினலா?… போலீசையே ஆச்சரியப்படுத்திய மிஷின் வித்தை… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…

9 மணத்தியாலங்கள் ago

சட்டம் ஒருவருக்கு ஒரு நீதியா?… நீதிபதி மகனின் வேட்டை… தூக்கி வீசப்பட்ட முதியவர்… நள்ளிரவில் பறிபோன அப்பாவி உயிர்… அடுத்து நடக்கப்போவது என்ன?…!!

கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…

9 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! புருஷன் கூட இல்லைனு அசிங்கப்படுத்துனாங்க… வாடகை வீட்டில் நடந்த அநியாயம்… சின்மயி உடைத்த ரகசிய வேதனை…!!

திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…

9 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! “அவள விட குறைவா எடுத்தியே…” பெற்றோரின் வார்த்தை… ஒரே வகுப்பில் இரட்டை சகோதரிகள்… 10-ம் வகுப்பு மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…

10 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… திக்… நிலத்தகராறில் வெடித்த கொடூரம்… நடுரோட்டில் குண்டுவீசி, துப்பாக்கிச் சூடு நடத்திய முகமூடி கும்பல்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…

10 மணத்தியாலங்கள் ago