தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக இருந்து தற்போது தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது நிர்வாகத்தின் தொடக்கத்திலேயே அதிரடியாக மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள குறு மற்றும் சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற செய்தி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதுமுள்ள விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்பட்டு, விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க முதல்வர் விஜய் முன்னுரிமை அளிப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகராகப் பதவியேற்கும் JCD பிரபாகர் அவர்கள் குறித்து, முன்னாள் முதல்வர் MGR அன்று கூறிய நெகிழ்ச்சியான நினைவுகளை இந்தச் செய்தி…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக்…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, மலேசியப் பிரதமர் அன்வார்…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், திருமணம் முடிந்த பதினைந்தே நாட்களில் புதுப்பெண் பிரகதி, தனது கணவர் திலீப்பை கூலிப்படை ஏவிக்…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ள சூழலில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான சி.வி.சண்முகம் MLA இன்று செய்தியாளர்களைச்…