ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பெரும்பாளி கிராமத்தில், உயிரிழந்த பட்டியலின முதியவர் ஒருவரின் உடலை அப்பகுதியிலுள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்குச் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது மயானத்தைப் பயன்படுத்த விடாமல் ஆதிக்கச் சாதியினர் முட்டுக்கட்டை போட்டதால், உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் பெரும் சர்ச்சை உருவானது.
இதனால் வாழ்வாதாரப் பாதிப்பு மற்றும் மோதல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், இறந்தவரின் உறவினர்கள் எதிர்த்தவர்களின் கால்களில் விழுந்து கண்ணீருடன் கெஞ்சும் அவல நிலை ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையேயும் மனித உரிமை அமைப்புகளிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் கிளப்பியது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினரும் காவல் துறையினரும் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, பலத்த பாதுகாப்புடன் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். மேலும், இறப்பிலும் தீண்டாமையைக் கடைப்பிடித்து காலில் விழ வைத்த நபர்கள் மீது அதிகாரிகள் தரப்பில் திங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…