சன் தொலைக்காட்சியில் முடிவுக்கு வந்த டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி அதில் நடிகர் வேலராமமூர்த்தி முதல் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள், பாடகர்கள் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி அடைந்தது. அந்த சீசனில் நரேந்திர பிரசாத் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்த நிலையில் தான் இப்போது இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷன் பணியானது தொடங்கிவிட்டதால் இன்னும் ஒரு சில மாதங்களில் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது.
இரண்டாவது சீசனில் முதல் சீசனை போலவே பலருக்கும் பரிட்சயமான மற்றும் பிரபலமானவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் சினிமாவில் வில்லனாகவும், குணசத்திர கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் வேலராமமூர்த்தி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள போகிறாரார். மேலும் இந்த சீரியலில் அவரிடம் அடிக்கடி சண்டைக்கு நிற்கும் பார்வதியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. அது போல நடிகை இனியா இந்த நிகழ்ச்சி மூலம் கம் பேக் கொடுப்பதற்காக முயற்சி செய்திருக்கிறாராம்.
பாடகர் உன்னிகிருஷ்ணன் போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதைப்போல எம் எஸ் பாஸ்கரன், சீரியல் நடிகர் நந்தன், சீரியல் நடிகை கேபிரியல்லா, சூப்பர் சிங்கர் பிரபலம் ஷியாம் விஷால் போன்றவர்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களோடு சாக்ஷி அகர்வாலும் கலந்து கொள்ள இருக்கிறாராம். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…