ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்ததால் பாட்டில்கள், மூடிகள் உள்ளிட்ட பேக்கேஜிங் பொருள்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உற்பத்தி செலவு உயர வாய்ப்புள்ளது. 12 முதல் 15 சதவீதம் வரை இதற்கு முன்பு இருந்த வரி தற்போது 18 சதவீதமாக மாறி உள்ளது. அதேசமயம் போக்குவரத்து சேவைக்கான வரியும் 18 சதவீதம் என்பதால் இது மதுபானங்களின் விலையில் உள்ளடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் சார்பாக சுமார் 551 வகை பிராண்டுகளின் 302 வகை மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் சில்லறை விலையை பத்து ரூபாய் வரை உயர்த்துவது குறித்து அதிகாரிகள் தற்போது ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மதுபான விலை உயர உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கிற்கு எதிராக, தமிழக அரசு…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட 'ஆக்ரா சௌபட்டி' என்ற இடத்தில், பொழுதுபோக்கிற்கான ஜிப்-லைனிங் (Zip-lining)…
திமுகவில் மீண்டும் 'செயல் தலைவர்' பதவி கொண்டு வரப்படவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை…
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை…
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, சட்டப்பேரவையில் விஜய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்…