“சேகர்பாபுவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Spread the love

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியின் துணைத் தலைவரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன், அக்கட்சியின் தலைமைக்கு சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ள திறந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ள இக்கடிதத்தில், “கொளத்தூரில் அன்பகம் கலை இல்லாததால் தலைவர் தோற்றார்; இதற்குப் பொறுப்பேற்று சேகர்பாபு தனது மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது தலைமை அவரை நீக்க வேண்டும்” என்று அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், துரைமுருகன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும், அந்த இடத்திற்கு தங்கம் தென்னரசு போன்றவர்கள் வர வேண்டும் என்றும், அதற்காக செந்தில்பாலாஜியை அந்த இடத்திற்கு நினைத்துவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கட்சியில் நிலவும் வாரிசு அரசியல் மற்றும் உள்கட்சிப் பூசல்கள் குறித்து அடுக்கடுக்கான புகார்களைக் கணையாக்கியுள்ள அவர், “இல்லையெனில் என்னைப்போன்ற வாரிசு அரசியல் இல்லாத, கொள்கைக் கோட்பாடு கொண்ட கலைஞர் தொண்டர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு ஒரேயொரு ஓட்டை மட்டுமே கடமைக்காகப் போடுவார்கள்” என்று எச்சரித்துள்ளார். மேலும், திமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசலைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “இவன் கனிமொழி ஆள், இவன் தயாநிதி ஆள், இவன் செல்வி ஆள், இவன் உதயநிதி ஆள், இவன் துர்கா ஆள் என்பதைப் புதைத்துவிட்டு, நாம் அனைவரும் கலைஞரின் ஆட்கள் என்பதை உணர வேண்டும்; குடும்பம் வேறு, கட்சி வேறு என்பதைத் தலைமை புரிந்து கொள்ள வேண்டும்” என்று அக்கடிதத்தில் பதிவிட்டுள்ளார்.

குடும்ப அரசியலையும் கோஷ்டிப் பூசலையும் கடுமையாக விமர்சித்துள்ள கிள்ளை ரவீந்திரன், “இரண்டும் ஒன்றுதான் எனில், எதிர்வரும் போராட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு அண்ணியார் துர்கா தலைமையிலும், பிற மாவட்டங்களுக்கு உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் தலைமையிலும் அறிவிப்பீர்களா?” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியாக, “இந்த கோஷ்டிப் பூசலுக்குத் தலைவரே உடனடியாக முடிவு கட்டுங்கள். நீங்கள் எங்கள் தலைவர் குடும்பம்; இதையே மாவட்டங்களில் இப்போதும் போல் அமல்படுத்தினால், இப்போதும் போல் எப்போதும் நமக்குத் தோல்விதான் மிஞ்சும்” என்று மிக ஆக்ரோஷமாகத் தனது கடிதத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.

Soundarya

Recent Posts

என்ன விட்டு அவன்கூட பேசுறியா?காதலியைக் காட்டுக்குக் கடத்தி கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்… அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் ஆசிட் ஊற்றிய அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த அங்குஷ் சவுத்ரி என்பவருக்கும், லலிதா என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவிக்கும் இடையே…

9 minutes ago

1.66 கோடி நகையை அமுக்கிய அழகி… நடுவழியில் அல்வா கொடுத்த திருமணமான காதலன்.. டெல்லி ஹோட்டலில் நடந்த பகீர் துரோகம்..!!

அகமதாபாத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற நகைக்கடையில் பணிபுரிந்து வந்த ஹர்ஷிதா ஷெட்டி என்ற இளம்பெண், ஏற்கனவே திருமணமான தனது காதலனுடன்…

17 minutes ago

“எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது” விஜய் சாப்பிடும் வீடியோ.. தவெக-வை டார்கெட் செய்து ஸ்டாலின் போட்ட ட்வீட்டால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அண்மையில் இணையத்தில் பரப்பப்பட்ட பல்வேறு போலிச் செய்திகளை…

22 minutes ago

ஆப்பிரிக்காவை ஆட்டிப்படைக்கும் எபோலா வைரல்.. 131 பேர் பரிதாப பலி.. உலக சுகாதார அமைப்பு அவசரப் பிரகடனம்..!!

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் (Ebola Virus) மிகத் தீவிரமாகப் பரவி…

28 minutes ago

மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் ₹3,000 உதவித் தொகை… தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதலமைச்சர் விஜய் அதிரடி உறுதி..!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஸ்மிதா சதாசிவம் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர், முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்தித்துப்…

34 minutes ago

மனிதநேயத்தின் உச்சம்..! யாசகம் எடுத்து அரசுக்கு ரூ.1 கோடி கொடுத்த வள்ளல்… தூத்துக்குடி முதியவரின் நெஞ்சை உருக்கும் கொடை உள்ளம்..!!

தூத்துக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்ற முதியவர், யாசகம் எடுத்துச் சேர்த்த பணத்தில் இருந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை…

40 minutes ago