‘கில்லி’ படத்தில் பாத்த அதே கெமிஸ்ட்ரி…! உயிர் பாதி உனக்கே… வெண்பனி நடுவே காதலில் உருகும் விஜய்- திரிஷா…!

By Begam on ஐப்பசி 11, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியுடன் நடிகை திரிஷா நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படம், ‘லியோ’. இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.

   

அனிருத் இசை அமைக்க , செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இத்திரைப்படம்  வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு தடைகளை தாண்டி நேற்று லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

   

 

அதன்படி லியோ திரைப்படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய சாதனைகளை படைத்திருக்கிறது. ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு கோடி பார்வையாளர்கள் இந்த படத்தின் டிரைலரை பார்த்தனர். பல மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனையும் படைத்தது. விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர்.

பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது சிங்கிளான ‘Badass’ பாடல் கடந்த 28ம் தேதி வெளியாகி ஹிட்டடித்தது. இந்நிலையில் ‘லியோ’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘அன்பெனும்’ பாடல் தற்பொழுது ரிலீஸாகியுள்ளது.  இந்த பாடலை தற்பொழுது தளபதி ரசிகர்கள் படுவைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த third சிங்கிள் பாடல்…