Connect with us

சவுத் இந்தியாவுல இதுமாதிரி எந்த படத்துக்கும் பண்ணது இல்ல…! வேற லெவல் சம்பவம் பண்ண Leo Team …! வைரலாகும் வீடியோ…!

CINEMA

சவுத் இந்தியாவுல இதுமாதிரி எந்த படத்துக்கும் பண்ணது இல்ல…! வேற லெவல் சம்பவம் பண்ண Leo Team …! வைரலாகும் வீடியோ…!

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கின்றார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

  

   

தமிழகத்தில் 9 மணிக்கு தான் லியோ முதல் காட்சி என அறிவிக்கப்பட்டாலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு லியோ படம் ரிலீஸ் ஆகிவிட்டது. தற்பொழுது தளபதி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். லியோ திரைப்படம் எல்சியு-வில் தான் உள்ளது என்றும், அனிருத் தனது பாடல்களால் மீண்டும் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார் என்றும் கூறிவருகின்றனர்.

இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் அவர்களுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றும் விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  இந்நிலையில் Leo Musical Drone Show video தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் இதுவரை எந்த படத்திற்கும் இதுபோல ட்ரோன்களை கொண்டு வானத்தில் இதுபோல் செய்தது கிடையாது. ட்ரோன்களை வைத்து முதலில் இசை சிம்பல்களையும், பின்னர் தளபதி விஜய் , திரிஷா கிருஷ்ணன், LEO symbol யும் வடிவமைத்து அசத்தியுள்ளனர். இதைக் கண்ட அனிருத் மற்றும் லோகேஷ் கைதட்டி, விசிலடித்து மகிழ்ந்தனர். இதோ அந்த வீடியோ…

Continue Reading
To Top