லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷா இந்த படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். லியோ படம் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோ பட கன்னட, தெலுங்கு, தமிழ் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது நேரு விளையாட்டு அரங்கில் நடக்க உள்ள இசை வெளியீட்டு விழாவில் 8000 பேர் மட்டுமே கலந்து கொள்ள இயலும். வரும் வழிகளில் பேனர், கட்டவுட் உள்ளிட்டவற்றை முறையான அனுமதி பெற்று வைக்க வேண்டும். 8000 பேர் தவிர ஒருவர் கூட அதிகமாக அரங்கத்தில் இருக்கக் கூடாது. அப்படி அரங்கத்திற்கு வெளியே இருந்தால் கூட சம்பந்தப்பட்ட நபர் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க காரணம் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் நடத்திய இசை கச்சேரியில் நடந்த குளறுபடியால் கூட இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. என்னதான் இருந்தாலும் இசை புயலின் வாழ்வில் இது ஒரு கரும்புள்ளியாகவே கருதப்படுகிறது. எந்தவித தவறுகளும் நடந்து விடக்கூடாது என்பதில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மிகவும் கவனமாக இருக்கின்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…