ஜெயிலரை விட வசூலில் சரிவை நோக்கி ‘லியோ’… மொத்த கலெக்ஷன் இவ்வளவுதானா…? என்னமோ நினைச்சோம்… இப்படி ஆகிடுச்சே…

By Begam

Published on:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் லியோ. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் வசூல் வேட்டை செய்து வருகின்றது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான லியோ உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

   

இந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை அள்ளிக் குவித்து இருக்கின்றது. இந்த திரைப்படம் முதல் நாள் மட்டுமே 148.5 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதன் மூலமாக இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ரிலீசான அன்று அதிக சாதனை செய்த படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலக அளவிலும் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்திருக்கின்றது. இன்றுடன் லியோ படம் வெளியாகி 13 நாட்களை கடந்துள்ளது. ஆனாலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் எதிர்பார்த்த அளவு வசூலை பெற முடியவில்லை. இதற்கு காரணம் முதல் பாதி நன்றாக இருந்தும் இரண்டாம் பாதி எதிர்பார்த்த அளவு லியோ படம் சுவாரசியமாக இல்லை என்பது தான். இதனால் தற்பொழுது வசூலில் சரிவை சந்தித்து வருகிறது லியோ.

ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி கிட்டத்தட்ட 650 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. நடிகர் விஜயின் லியோ திரைப்படம் இந்த சாதனையை முறியடிக்கும் என தளபதி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் லியோ படத்தின் தற்பொழுது வரையிலான மொத்த கலெக்ஷன் விவரம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி லியோ படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 553.7 கோடி வசூல் செய்து உள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் 600 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜெயிலரை வசூலை விட குறைவு தான். ஆனாலும் இனிவரும் நாட்களில் லியோ ஜெயிலரின் வசூலை முந்துமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.