தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற புகழுடன் வளம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அதை மீண்டும் மீண்டும் உறுதி செய்யும் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். ஏற்கனவே மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தையும் அந்த வரிசையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றார்.
நடிகர் விஜய் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் லியோ திரைப்படம் தொடக்கம் முதலே ரசிகர்களிடம் பாசிட்டிவான கமெண்டுகளை பெற்றிருக்கின்றது. இதனால் இந்த திரைப்படமும் வெற்றி என்பதில் எந்த ஐயமும் இல்லை. சமீபகாலமாக ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் இடையே சில பிரச்சனை நடைபெற்று வருகின்றது. அதாவது விஜயை பலரும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூற அதை எதிர்க்கும் வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் பட்டம் பறிக்க 100 பேரு என்ற பாடல் வரி இடம்பெற தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது.
ஜெயிலர் திரைப்படம் நல்ல வசூல் வேட்டையை செய்த நிலையில் லியோ படம் அதை முறியடிக்குமா? என்று ஒரு பேச்சு அடிபட்டு கொண்டிருந்தது. பலரும் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறி வந்தனர். ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 600 கோடியை கடந்து வசூல் செய்தது . ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் 44 கோடி ரூபாய் வசூல் செய்தது.
ஆனால் லியோ திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் 46 கோடியை வசூல் செய்திருக்கின்றது. இந்தியாவில் மட்டுமே இன்று ஒரு நாளில் இந்தப்படம் 68 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. உலக அளவில் முதல் நாளில் 145 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் லியோ திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை முறியடித்து விட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…