அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற வெளிநாடுகளைப் போலவே, தமிழகச் சட்டசபை நிகழ்வுகளையும் நீக்கப்பட்ட பகுதிகள் இன்றி நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகச் சபாநாயகர் பிரபாகர் தெரிவித்துள்ளார். சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளும் விவாதங்களும் சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ மற்றும் வீடியோக்களாக வெளியாவது சபை உரிமை மீறலாகும் என திமுக உறுப்பினர் வேலு சுட்டிக்காட்டினார். இது போன்ற செயல்கள் அவையின் மாண்பைக் குறைப்பதாகக் கூறிய அவர், இச்சம்பவம் குறித்து அளித்த கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவிற்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர், வெளிநாடுகளில் கடைப்பிடிக்கப்படும் நவீன தொழில் நுட்ப நடைமுறைகளைப் பின்பற்றிச் சட்டசபை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யும் வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார். எனவே, இந்த விவகாரத்தை உரிமைக்குழுவுக்கு அனுப்பாமல் தாமே ஆய்வு செய்து தகுந்த முடிவை எடுக்கப்போவதாகத் தெரிவித்தார். அதன்படி நேரலையானது சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதமாக ஒளிபரப்பப்பட உள்ளதாம். இருப்பினும், ஏற்கனவே நடைபெற்ற உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதத்தின் போது முன்வைக்கப்பட்டது.
அசாமின் தேமாஜி மாவட்டம் ஜோனை நகரில் உள்ள தெலாம் பஜாரில், பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு…
ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…
ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…