‘தி லெஜண்ட்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தொழிலதிபர் சரவணன் அருள். வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வரும் இவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நாயகிகளுடன் ஆட்டம் போட்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இதையடுத்து சினிமாவில் நுழைய முடிவெடுத்த சரவணன், புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதன் முதல் படமான தி லெஜண்ட் படத்தில் தானே ஹீரோவாக நடிக்க உள்ளதையும் அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் பிரபு, விஜயகுமார், விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்பொழுது தனது அடுத்த படத்திற்க்கான வேலைகளில் பிசியாக உள்ளார் லெஜண்ட்.
தற்பொழுது லியோ திரைப்படத்தின் ட்ரைலர் குறித்து நடிகர் லெஜண்ட் சரவணன் வெளியிட்ட பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியுடன் நடிகை திரிஷா நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் படம், ‘லியோ’. இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். நேற்று லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்நிலையில் நடிகர் லெஜண்ட் சரவணன் தனது X தளத்தில் லியோ ட்ரைலர் குறித்து ‘Electrifying & Terrific ‘ என்று கூறியுள்ளார். இதோ அந்த பதிவு…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…
திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…
அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…