பீகாரைச் சேர்ந்த 15 வயதே ஆன இளம் கிரிக்கெட் புயல் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் உலகளாவிய சாதனைகளைத் தகர்த்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் 2026 தொடரின் எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராகக் களம் கண்ட அவர், எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அசாத்திய திறமையை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி, டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் 14 ஆண்டுகால அசைக்க முடியாத சாதனை ஒன்றையும் முறியடித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கெய்ல் அடித்த 59 சிக்ஸர்களே சாதனையாக இருந்த நிலையில், இந்த சீசனில் 65 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வைபவ் சூர்யவன்ஷி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி காட்டி ஆட்ட நாயகன் விருதை வென்ற சூர்யவன்ஷி, போட்டிக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து தனது ஆட்ட உத்திகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அடுத்த போட்டியிலும் இதே நேர்மறையான எண்ணத்துடன் விளையாடி, அணியை இறுதிப் போட்டிக்குக் கொண்டு செல்ல முயற்சிப்பேன். மைதானத்திற்குள் நுழையும்போது எதிரணியின் பந்துவீச்சாளர்கள் யார், இந்த விக்கெட்டில் அவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும், பவுண்டரி எல்லைகளின் அளவு என்ன போன்ற தொழில்நுட்ப விஷயங்களை மட்டுமே சிந்திப்பேன். எனது நோக்கத்தில் நான் தெளிவாகவும் நேர்மறையாகவும் இருக்கும்போது, தானாகவே பந்துவீச்சாளர்கள் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்; அந்தச் சமயத்தில் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுவேன்” என்று தனது முதிர்ச்சியான ஆட்ட அணுகுமுறையை விவரித்தார்.
மேலும் தனது தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றியே முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டிய சூர்யவன்ஷி, “சதங்கள் என்பது விளையாட்டுப் பயணத்தில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும், ஆனால் இந்த தருணத்தில் ஐபிஎல் கோப்பையை எப்படிக் கைப்பற்றுவது என்பதில் மட்டுமே எனது முழுக் கவனமும் குவிந்துள்ளது. எதிரணிகள் என்னைத் வீழ்த்த என்ன திட்டமிடுகிறார்கள் என்பதைப் பற்றி நான் ஒருபோதும் சிந்திப்பதில்லை, அது அவர்களுடைய வேலை. நான் எப்போதும் எனது சொந்த திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி, எனது இயல்பான கிரிக்கெட்டை சுதந்திரமாக விளையாட முயற்சிப்பேன்” என்று மிகவும் முதிர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் தெரிவித்துள்ளார்.
பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…
சாலையோரத்தில் கை கால்கள் முடங்கி நடக்க இயலாதவர் போல நடித்துப் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவரிடம், "சிகிச்சை அளிக்க…
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…