நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் வருகிற ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிக அதிகமாக காணப்படுகிறது. ஜனநாயகன் படத்தில் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜனவரி 9ம் தேதி அல்லது 10ம் தேதி வெளியாகும் என்ற தகவல் பரவியது. அதனால் விஜய் – சிவகார்த்திகேயன் படங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன என்ற கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இப்போது பராசக்தி படம் ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரி 14ம் தேதி தமிழ்நாட்டில் மட்டும் ரிலீஸாகும். ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் 3 பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் காரணமாக போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ஒரு வாரம் கழித்து ஜனவரி 23 அல்லது 24ம் தேதி அந்த மாநிலங்களில் பராசக்தி தெலுங்கு வெர்சன் ரிலீஸாகும் என படக்குழு தரப்பில் தகவல் வௌியாகி உள்ளது.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளக் கால…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக, அடுத்தடுத்து குதிரை பேரம்…
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு…
அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய…
தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…