நடிகர் சூர்யா நடித்த 45வது படம் கருப்பு. கடந்த தீபாவளிக்கு ரிலீஸ் என்று சொல்லப்பட்ட இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதன்பிறகு சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்து மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே கருப்பு படம் குறித்து இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, கருப்பு படத்தோட வேலைகள் எல்லாம் முடிஞ்சு ரிலீசுக்கு தயாராக இருக்குது.
இப்போது இருக்கிற ரசிகர்கள் படம் கொஞ்சம் சரியில்லை என்றாலும் பயங்கரமா விமர்சனம் பண்றாங்க. அதனால நாங்க சும்மா பில்டப் கொடுத்து பெரிய எதிர்பார்ப்பை உருவாக்க விரும்பலே. கோடை விடுமுறையில் படம் ரிலீஸ் ஆகும். இது பெற்றோரோட வந்து ஜாலியாக ரசிகர்கள் ரசிக்கக்கூடிய ஒரு படமாக இருக்கும் என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார். இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். சூர்யா இதில் 2 வேடங்களில் நடித்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…