“புதன்-சுக்கிரன்: லட்சுமி நாராயண ராஜயோகத்தால்… உங்க வீட்டுல அதிர்ஷ்டக் காற்று வீசப்போகுது… இதுல ராசி இருக்கா பாருங்க…!”

Spread the love

ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சுத்திறன் மற்றும் வியாபாரத்தின் காரகனான புதன் பகவான், வரும் ஜூன் 22 ஆம் தேதி தனது சொந்த ராசியான மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். அங்கு ஏற்கனவே ஆடம்பரம் மற்றும் செல்வத்தின் காரகனான சுக்கிரன் பயணித்து வருவதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இந்த அரிய கிரக நிலையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பிட்ட மூன்று ராசியினருக்கு இது அசுர வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தைத் தரவுள்ளது.

இந்த யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் கடின உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன்களும், பல நற்செய்திகளும் தேடி வரும். அலுவலகத்தில் உங்களது சிறப்பான செயல்பாட்டிற்குப் பாராட்டுகள் கிடைப்பதுடன், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன. அதேபோல் மிதுன ராசியினருக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முன்னேற்றப் பாதைகள் திறக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமைவதுடன், நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக் கிடந்த பணமும் கைக்கு வந்து சேர்ந்து நிதிநிலை பலப்படும்.

கன்னி ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, 11-ஆம் வீட்டில் இந்த யோகம் அமைவதால் வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்கள் நிகழும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவோடு, நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மேலும், தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது துறையில் எதிர்பாராத அளவிற்குச் சிறப்பான லாபத்தையும் மாபெரும் முன்னேற்றத்தையும் காண்பார்கள்.

Swetha

Recent Posts

Real Life Money Heist!… 2 நிமிடத்தில் மாயமான கார்… உள்ளே இருந்த பணம் என்னாச்சு?… CCTV-க்கே தண்ணி காட்டிய பலே திருடர்கள்… நடுங்க வைக்கும் திருட்டு…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…

12 minutes ago

16 ஆண்டு அரசியல் கொள்கைக்கு திடீர் செக்?…. சீமானின் ‘பொது வேட்பாளர்’ மாஸ்டர் பிளான்…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…

14 minutes ago

“கோடிக் கணக்கில் கொள்ளையா?…. பெரியார் அறிவுலகமா இல்லை ‘ஊழல் உலகமா”….. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் பகீர் ஊழல்…. கொதித்தெழுந்த முதல்வர் விஜய்….!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…

19 minutes ago

பைக் கேட்டு அடம் பிடித்த மகன்… பறிபோன 20 வயது இளைஞனின் உயிர்…. மொட்டை மாடியில் நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் உண்மை…!!

கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…

23 minutes ago