Categories: சினிமா

“விளையாட்டுல போய்ட்டு மதத்தை கலந்துருக்கீங்க”… தீபாவளி ட்ரீட்டாக வெளியான தலைவரின் ‘லால் சலாம்’ பட டீசர்…

Spread the love

சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படம் ‘லால் ஸலாம்’. இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ‘ லால் சலாம்’ என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.


மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர்.  இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் சூப்பர் ஸ்டாரின் ஷூட்டிங் ஸ்பாட்  வீடியோ வெளியாகி வைரலானது.

தற்போது லால் ஸலாம் திரைப்படத்தின் டீசர் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த டீசர் வீடியோவில், ‘விக்ராந்த், விஷ்ணு விஷால் தலைமையிலான இரு அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மத மோதலாக உருவெடுத்து பெரும் கலவரமாக வெடிப்பதுடன் டீசர் தொடங்குகிறது.

இதனால் சில மரணங்கள் நிகழ்கின்றன. இதனையடுத்து ரஜினியின் மாஸான என்ட்ரி. ‘விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க. குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சுருக்கீங்க’ என்று ரஜினி பேசும் வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த டீசர் வீடியோ…

Begam

Recent Posts

நாளை வாக்குப்பதிவு: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா..? இதோ மொபைலில் சரிபார்க்கும் எளிய வழி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி மற்றும்…

14 minutes ago

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..! த்ரிஷா கொடுத்த அதிரடி குட் நியூஸ்.. குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…

24 minutes ago

விலை போனதா மனிதநேயம்..? துடிதுடிக்க அடித்துக் கொல்லப்பட்ட சமையல் கலைஞர் – வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த நண்பர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…

28 minutes ago

நான் உன்னை விட்டு பிரிஞ்சி போனா என்ன பண்ணுவ..? தாய் கேட்ட அந்த கேள்வி… குழந்தை சொன்ன உருக்கமான பதில்… கியூட் வீடியோ வைரல் ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…

50 minutes ago

BREAKING: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..! கிராமுக்கு ரூ. 50 குறைந்து சவரன் ரூ. 1.14 லட்சத்திற்கு விற்பனை..!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…

53 minutes ago