வங்கி கணக்குகளுக்கு புதிதாக அப்டேட் ஒன்றுக் கொண்டு வரப்பட்டுள்ளது. உடனடியாக அப்டேட் செய்யவில்லை என்றால் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாதாம். எப்படி அப்டேட் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம். நாட்டு மக்களாக இருக்கும் அனைவருமே வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டில் மத்திய மோடி அரசால(PMJDY) என்ற திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளன. ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் உள்ள (KYC) கேஒய்சியை புதுப்பிக்க வேண்டும்.
உடனடியாக அப்டேட் செய்யாமல் விட்டால் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு மற்றும் கணக்கை முடக்கப்படலாம். வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமலும் போகலாம். அப்டேட் செய்வதற்கு வங்கிக்குச் சென்று கேஒய்சி படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அப்டேட்டை கட்டாயம் அனைவரும் செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
(KYC) Know Your Customer என்றால் உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று பொருள். அடையாளம் மற்றும் முகவரியை உறுதி செய்வதற்காகவே கேஒய்சி பயன்படுகிறது. கணக்கில் ஆவணங்கள் சரிபார்க்க மற்றும் இணைக்க, முகவரி, மொபைல் எண், சான்றிதழ் போல விவரங்களை மாற்றி இருந்தால் அதை சரிப் பார்க்கவும் கேஒய்சி உதவுகிறது. கேஒய்சி அப்டேட் செய்ய மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் செய்துக் கொள்ளலாம். வங்கி கணக்கில் கேஒய்சி புதுப்பிக்கவில்லை என்றால் வங்கி கணக்கை முடக்கி வைக்கலாம்.
நேரில் செல்ல முடியவில்லை என்றால் டிஜிட்டல் கேஒய்சி அல்லது இ-கேஒய்சி வசதியை மொபைலில் மற்றும் நெட் பேங்கில் மூலமாகவும் பயன்படுத்தலாம். சில வங்கிகளில் வீட்டிற்கு வந்து அப்டேட் செய்துக் கொடுக்கப்படுகிறது. ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம், வாடகை ஒப்பந்தம், பயன்பாட்டு பில் இது போன்ற ஆவணங்களை கொடுத்து அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த அப்டேட் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கேஒய்சி அப்டேட்டை அவசியம் முடித்திருக்க வேண்டும்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…