Categories: சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெயலலிதாவின் செயலால் கடுப்பான சிவாஜி.. பல வருடம் கழித்து உண்மையை உளறிய குட்டி பத்மினி..!

Spread the love

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்திய அளவில் இரும்பு மனுஷி என்று பல அரசியல் தலைவர்களால் போற்றப்பட்டவர். அரசியல் என்பதையும் தாண்டி அவருடைய இளமை காலங்களை திரும்பிப் பார்த்தால் ஜெயலலிதா ஒரு சிறந்த நடிகை என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய 15 வது வயதிலேயே சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து விட்டார். ஜெயலலிதா அரசியலுக்குள் வந்தது எப்படி என்றால் தனக்கு விருப்பமில்லாமல் நடந்த ஒன்று என்றுதான் சொல்வார். அதனைப் போலத்தான் அவர் சினிமாவுக்குள் வந்ததும். நன்றாக படிக்கக்கூடிய மாணவி படிப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய தாய் நடிகை சந்தியாவின் வற்புறுத்தலால் சினிமாவுக்குள் வந்தவர் தான் ஜெயலலிதா.

மிகவும் சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்ததால் பெரும்பாலும் அவருடன் ஜோடி சேர்ந்த அத்தனை நடிகர்களும் அவரை விட வயதில் மூத்தவர்களாக தான் இருந்தனர். 1965 ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை என்ற திரைப்படம் மூலமாகத்தான் ஜெயலலிதா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த ஆண்டு அவருக்கு சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1966 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளியான மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற திரைப்படத்தில் ஜெயலலிதா நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தை நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், ஜெயலலிதா எப்போதும் செட்டுக்குள் வந்தால் அங்கிருக்கும் எதையும் கவனிக்காமல் தன்னுடைய வேலையை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருப்பார். அப்படித்தான் ஒரு நாள் சிவாஜி உள்ளே நுழையும் போது ஜெயலலிதா கால் மேல் கால் போட்டு கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து சிவாஜி கண்டுகொள்ளாமல் சென்று விட்டார். பிறகு என்னிடம் வந்து என்ன பெரிய இவளா அவ, என்னை பார்த்து எப்படி உட்கார்ந்து இருக்கிறார் என்று சொன்னார்.

அவங்க அப்படித்தான் எப்போதும் புத்தகம் தான் படித்துக் கொண்டிருப்பாங்க என்று நான் சொல்லி சிவாஜியை சமாதானப்படுத்தினேன். அதன் பிறகு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் ஜெயலலிதாவை அழைத்து சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்திய போது மிகவும் மரியாதையாக கைகூப்பி வணங்கி பேசினார். அப்போதுதான் சிவாஜி ஜெயலலிதாவை பற்றி நினைத்தது தவறு என்று நினைத்துக் கொண்டார். உண்மையிலேயே மிகவும் மரியாதை தெரிந்தவர்தான் ஜெயலலிதா. அவருக்கு ஒரு கட்டத்தில் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது.

அந்த வயசுல சகஜமா எல்லோருக்கும் இருக்கக் கூடிய ஆசை தான் அது. திருமணம் செய்து கொண்டு நல்ல குடும்பப் பெண்ணாக குடும்பம் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவை விரும்பாதவர்கள் யாருமே கிடையாது. எங்கு சென்றாலும் இவருக்கு தனி ஒரு மரியாதை கிடைத்தது மட்டுமல்லாமல் இவரை அனைவரும் விரும்பினார்கள். ஆனால் அவருடைய அம்மா சென்ற பிறகு நல்ல கதையை தேர்வு செய்து சினிமாவில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அதனால் பலரின் அறிவுரையை கேட்டு ஏதோ சினிமாவிற்கு நடிக்க வந்தோம் என்று நடித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா ஒரு கட்டத்தில் நல்ல கதைகளை தேர்வு செய்து அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் என்று ஜெயலலிதா பற்றி குட்டி பத்மினி பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

8 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

8 மணத்தியாலங்கள் ago