“அம்மாவின் படத்தை அகற்றிவிடுவாயா?” தாயின் கேள்வியால்… கண்ணீருடன் அரசியலுக்கு முழுக்கு போட்ட குன்னம் ராமச்சந்திரன்…!!

Spread the love

ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரன், திமுகவில் இணையப்போவதாக அறிவித்த ஒரே நாளில் தனது முடிவை மாற்றி, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நேற்று வரை ஜனவரி 26-ல் திமுகவில் இணையப்போவதாகக் கூறிவந்த குன்னம் ராமச்சந்திரன், இன்று கண்ணீருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நான் திமுகவில் இணைய முடிவெடுத்ததை அறிந்த என் தாய், ‘நம் வீட்டில் இருக்கும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிடுவாயா?’ என்று கேட்டார். அந்தக் கேள்வி என் நெஞ்சத்தை உலுக்கிவிட்டது” என உருக்கமாகத் தெரிவித்தார்.

குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தல் மற்றும் தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, எந்தக் கட்சியிலும் இணையாமல் பொது வாழ்க்கையில் இருந்தே விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். ஜெயலலிதா மீதான விசுவாசத்திற்காகத் தனது அரசியல் முடிவை அவர் மாற்றிக்கொண்டது பெரம்பலூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வைத்திலிங்கம் போன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்த நிலையில், குன்னம் ராமச்சந்திரனின் இந்தத் திடீர் பின்வாங்கல் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Soundarya

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

1 மணத்தியாலம் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

1 மணத்தியாலம் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

1 மணத்தியாலம் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

1 மணத்தியாலம் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

2 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

2 மணத்தியாலங்கள் ago