தமிழ் சினிமாவில் கவின் மற்றும் ஹரீஷ் கல்யாணத்துக்கு அடுத்ததாக நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளவர்தான் நடிகர் மணிகண்டன். சினிமாவில் இவருடைய கதை தேர்வு என்பது நன்றாக இருப்பதால் அடுத்த கட்ட உயரத்திற்கு சென்று கொண்டிருக்கின்றார். சில்லு கருப்பட்டி படத்தில் தொடங்கி ஜெய் பீம், குட் நைட் மற்றும் லவ்வர் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துள்ள மணிகண்டனின் ஹிட் லிஸ்டில் லேட்டஸ்ட் ஆக இணைந்துள்ள திரைப்படம் தான் குடும்பஸ்தன்.
இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியான நிலையில் இந்த திரைப்படத்தை ராஜேஸ்வர் காளி சாமி இயக்கி இருந்தார். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக சான்வி மேக்னா என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார். இவர்களைத் தவிர பாலாஜி சக்திவேல், குரு சோமசுந்தரம், ஜென்சன் திவாகர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். குடும்பங்கள் கொண்டாடக்கூடிய ஃபேமிலி என்டர்டைனர் திரைப்படம் ஆக குடும்பஸ்தன் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகின்றது. இந்நிலையில் திரைப்படம் முதல் நாள் வசூல் 1 கோடி வசூலித்துள்ளது.
2ம் நாள் வசூல் 2.2 கோடியும்,மூன்றாம் நாள் வசூல் 3.15 கோடி யும் வசூலித்துள்ள நிலையில் 4ம் நாளான இன்று உலகளவில் மொத்த வசூல் 8.7 கோடி வசூலித்துள்ளது. இப்படி நாளுக்கு நாள் கணிசமாக வசூல் ஏறிக்கொண்டு இருப்பது படம் இன்னும் அதிகளவில் ரசிகர்களை சென்றடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…