Categories: சினிமா

இதுக்கு பேர் தான்பா வளர்ச்சி.. ஆரம்ப காலத்தில் ரூ.20 லட்சம் சம்பளம் வாங்கிய குடும்பஸ்தன் மணிகண்டனின் இன்றைய சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

Spread the love

காதலும் கடந்து போகும், காலா ,விக்ரம் வேதா போன்ற பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன்.  அதன் பின்னர் அவர் ஜெய் பீம் படத்தில்  நடித்த ராஜாக்கண்ணு கதாபாத்திரம் அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்று அவரை ஒரு நடிகராக அங்கீகரிக்க வைத்தது. மணிகண்டன் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் . இவர் இயக்கிய “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. அதன்பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த ‘குட்னைட்’ படம் பெரிய வெற்றியைப் பெற்று அவரைக் கதாநாயகன் ஆக்கியது.

அதன் பின்னர் அவர் நடித்த லவ்வர் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இப்போது ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது.தற்போது மணிகண்டன் தமிழ் சினிமாவில் முக்கியமான ஹீரோக்களில் ஒருவராக மாறிவிட்டார். இப்படியான நிலையில் நடிகர் மணிகண்டனின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இவர் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் 20 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்த மணிகண்டனின் தற்போதைய சம்பளம் 2 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தரமற்ற திரைப்படங்களை கொடுத்து வரும் இளம் ஹீரோக்கள் பல கோடிகள் சம்பளம் வாங்கி வரும் போது தரமான படங்களை கொடுக்கும் மணிகண்டனுக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் தாராளமாக கொடுக்கலாமே என்று தயாரிப்பாளர்களும் கருதுவதாக கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

54 seconds ago

“ஸ்டாலின் சார் போல ஏமாற்ற மாட்டோம்”.. “மாதம் ரூ.2500, இலவச தங்கம், 200 யூனிட் மின்சாரம்”… தமிழகத்தையே அதிரவைத்த தவெக-வின் தேர்தல் அறிக்கை…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

4 minutes ago

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

12 minutes ago

“அண்ணன் சொல்லிட்டாரு.. தங்கச்சி முடிச்சுட்டாங்க”… நாடாளுமன்றத்தில் திமுகவின் ‘தர்மயுத்தம்’ ஆரம்பம்… ஸ்டாலின் எடுத்த விஸ்வரூபம்…!

மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…

19 minutes ago

“விஜய்யின் காலில் விழுந்து கதறினேன்.. எல்லாவற்றிற்கும் இவர்தான் காரணம்”…. திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் பரபரப்பு புகார்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

26 minutes ago

பகீர்!… சொந்தப் பேத்தியையே சீரழித்த தாத்தா!… காமவெறி முதியவருக்கு 61 ஆண்டு சிறை தண்டனை… சிவகங்கை நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…

29 minutes ago