இந்து மதத்தின் படி கிருஷ்ண ஜெயந்தி என்பது மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தி ஆனது ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26 ஆம் தேதி நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில் சில தங்கள் வீடுகளில் கிருஷ்ண பாதங்களை வரைந்து கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து கிருஷ்ணரை வழிபடுவது வழக்கம்.
இப்படி வழிபடும்போது கிருஷ்ணரின் அருளால் வாழ்வில் உள்ள அனைத்து வகையான துன்பங்களும் நீங்கி வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என நம்புகிறார்கள். அதன்படி கிருஷ்ண ஜெயந்தி அன்று சில பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்று ஐதீகமும் உள்ளது. அப்படி என்னென்ன பொருட்கள் வாங்கலாம் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
வீட்டில் குட்டி கிருஷ்ணரின் சிலை இல்லாவிட்டால் இந்த நாளில் குட்டி கிருஷ்ணர் சிலையை வாங்கி பூஜையறையில் வைக்கலாம். இது வீட்டிற்கு செழிப்பை கொண்டு வரும்.
கிருஷ்ணருக்கு புல்லாங்குழல் என்றால் மிகவும் பிடிக்கும். இப்படி கிருஷ்ணருக்கு பிரியமான புல்லாங்குழலை கிருஷ்ண ஜெயந்தி நாளில் வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்தால் நல்லது நடக்கும். புதிய வணிகம் தொடங்கினால் புல்லாங்குழலை அங்கும் கொண்டு செல்லலாம்.
அடுத்ததாக கிருஷ்ணருக்கு பிடித்தது அவர் தலையில் இருக்கும் மயில் இறகு தான். இது ராதாவின் அன்பின் அடையாளமாக கிருஷ்ணர் வைத்துள்ளார். இதனை கிருஷ்ண ஜெயந்தி நாளில் வாங்கினால் செல்வம் பெருகும். வீட்டில் அன்பு அதிகரிக்கும் அதே சமயம் பணத்திற்கும் பஞ்சம் இருக்காது.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் பசு மற்றும் கன்று சிலையை வீட்டிற்கு வாங்கி வைக்கலாம். இது 14 செல்வங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. பசுவின் சிலை வீட்டில் உள்ள செல்வத்தில் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. வீட்டில் மகிழ்ச்சி பெருகுவது மட்டுமல்லாமல் மனம் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அதனைப் போலவே கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்ததில் வெண்ணை முக்கிய இடம் வகிக்கிறது. வெண்ணையை கிருஷ்ண ஜெயந்தி நாளில் வாங்கி கிருஷ்ணருக்கு படைத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…