தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கான்கிரீட் வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பலரும் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு அரசு பல உதவிகளை செய்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினர். அதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் பண உதவி வழங்கி வரும் நிலையில் KPY பாலா அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர் மற்றும் பம்பல் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலை ஆயிரம் ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய பாலா, என்னை வாழ வைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி இது. 2015 இல் மழை வந்தபோது செய்ய வேண்டும் என ஆசை இருந்தது ஆனா அப்போ என்கிட்ட காசு இல்ல. அதனால் இப்போ என் அக்கவுண்டில் இருந்த சுமார் 2.15 லட்சம் ரூபாயை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1000 ரூபாயை கொடுத்துள்ளேன். இது நான் சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணம் என பாலா கூறியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…