தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கான்கிரீட் வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பலரும் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு அரசு பல உதவிகளை செய்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினர். அதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் பண உதவி வழங்கி வரும் நிலையில் KPY பாலா அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர் மற்றும் பம்பல் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலை ஆயிரம் ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய பாலா, என்னை வாழ வைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி இது. 2015 இல் மழை வந்தபோது செய்ய வேண்டும் என ஆசை இருந்தது ஆனா அப்போ என்கிட்ட காசு இல்ல. அதனால் இப்போ என் அக்கவுண்டில் இருந்த சுமார் 2.15 லட்சம் ரூபாயை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1000 ரூபாயை கொடுத்துள்ளேன். இது நான் சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணம் என பாலா கூறியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து 22 லட்சம் டன் எல்பிஜி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது ஆண்டின்…
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று (நவ., 18) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைகழக பதிவாளர் அறிவிப்பு…
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் பூங்கொடி. இவருடைய மகள் மகாலட்சுமி. 29 வயதான இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சேர்ந்த…
என்ஆர் காங்கிரஸ் கட்சி NDA கூட்டணியிலிருந்து விலகுவதாக பேச்சு எழுந்து வந்தது. இந்த நிலையில் தற்போது வரை NDA கூட்டணியில்…
நவோதயா பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள்…
தமிழக அரசியலில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயின் களத்தில் இறங்கியுள்ளதால் 2026…