பெற்றோருக்கு 60-ம் கல்யாணம் செய்து அழகு பார்த்த KPY பாலா… வெளியான புகைப்படங்கள்… வாழ்த்தும் ரசிகர்கள்..!!

By Nanthini on ஆவணி 3, 2023

Spread the love

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்கேற்ற பலரும் இன்று மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர்.

   

அப்படி சின்ன திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் KPY பாலா.

   

 

 

இவர் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் வெட்டுக்கிளி என்று அழைக்கப்படும் இவர் காமெடி செய்து மற்றவர்கள் கொடுக்கும் கவுண்டருக்கு உடனடியாக பதில் கவுண்டர் கொடுப்பதில் வல்லவர்.

 

தற்போது இவர் பல திரைப்படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கலக்கப்போவது யாரு பாலா தன்னுடைய பெற்றோர்களுக்கு 60ம் கல்யாணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பாலா பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Bj Bala இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bjbala_kpy)