#image_title
தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் கோவை சரளா. அந்த படத்தில் அவருக்கு சிறிய வேடம் கொடுத்த பாக்யராஜ். அதன் பின்னர் தான் இயக்கிய சின்னவீடு திரைப்படத்தில் கதாநாயகனின் தாயார் வேடத்தில் நடிக்கவைத்தார். அப்போது கோவை சரளாவுக்கு வெறும் 17 வயதுதானாம். ஆனால் தன்னுடைய நடிப்பால் அந்த குறை தெரியாதவாறு பார்த்துக் கொண்டார்.
அதன் பின்னர் காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து புகழ்பெற்றார் கோவை சரளா. மனோரமாவுக்குப் பிறகு கோவை சரளாதான் என்ற நிலையை தமிழ் சினிமாவில் உருவாக்கினார். காமெடி நடிகர்களான கவுண்டமணி, வடிவேலு, விவேக் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து பட்டையக் கிளப்பினார்.
சதி லீலாவதி படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாகவும் நடித்தார். அதன் பின்னர் தனக்கு வயதானதும் சந்தானம், யோகி பாபு வரை அனைவரோடும் நடித்தார். இதற்கிடையில் அவருக்கு தெலுங்கு சினிமாவில் இருந்து வாய்ப்பு வர அங்கு சென்ற அவர் சில ஆண்டுகள் அங்கேயே தொடர்ந்து நடிக்கும்படி ஆனது. அதன் பிறகு இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
#image_title
இந்நிலையில் தமிழ் சினிமாவுக்கும் தெலுங்கு சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து அவர் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “தெலுங்கு சினிமாவுல எல்லா காமெடி நடிகர்களும் சேர்ந்து நடிக்குறாங்க. அவங்களுக்குள்ள ஈகோ இல்ல. ஆனால் தமிழ் சினிமாவுல அத மாதிரி நடிக்க நகைச்சுவை நடிகர்கள் முன்வர மாட்டேங்குறாங்க.” எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் மற்றும் சந்தானம் போன்றவர்களோடு எல்லாம் சேர்ந்து நடித்துள்ள கோவை சரளாவின் இந்த கருத்து உண்மைதான். கவுண்டமணி செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களோடு இணைந்து ஜனகராஜ் அதிக படங்களில் நடித்ததில்லை. அதே போல வடிவேலுவும் விவேக்கும் இணைந்து நடிப்பதை ஒரு கட்டத்தில் நிறுத்திக் கொண்டனர். சூரியும் சந்தானமும் ஒரே ஒரு படத்தில்தான் சேர்ந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…