மதுரையை சேர்ந்த தேவா (27) என்ற வாலிபர் கூலித்தொழில் செய்து தன்னுடைய குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்து கடவுள் அருகே உள்ள பகுதியில் தன் குடும்பத்தோடு வசித்து வந்த நிலையில் இவருக்கு இந்திராணி என்ற மனைவியும் மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இதனுடைய கடந்த 26 ஆம் தேதி தேவாவை காணவில்லை என்று தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ததில் மனைவி இந்திராணி கணவரை கொலை செய்து விட்டதாக கூறி போலீசில் சரணடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் இந்திராணிக்கு தன்னுடைய சித்தப்பா உடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இருவரும் தேவா இல்லாத சமயத்தில் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். இது ஒரு கட்டத்தில் தேவாவுக்கு தெரிய வந்ததால் இருவரையும் கண்டித்துள்ளார். தங்களுடைய கள்ளக்காதலுக்கு கணவன் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்து கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அவரை கத்தியால் குத்தி இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
பிறகு ஒரு ஆம்புலன்ஸை கொண்டு அவருடைய உடலை ரயில் தண்டவாளத்தில் கொண்டு சென்று போட்டுவிட்டனர். அதன் பிறகு எதுவும் நடக்காதது போல இந்திராணி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். போலீசார் தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினால் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் இந்திராணி போலீசில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவாக இருக்கும் இந்திராணியின் சித்தப்பா வினோத்குமார் மற்றும் அவருடைய நண்பர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…