#image_title
காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சூரி. முன்னணி நடிகர்களுடன் இணைந்து சூரி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவரது காமெடிக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன விடுதலை படத்தின் மூலம் சூரி ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.
அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரியின் கருடன் திரைப்படமும் ரிலீஸ் ஆனது. இந்த படத்திலும் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகும் கொட்டுக்காளி திரைப்படத்தில் ஹீரோவாக சூரி நடித்துள்ளார். இயக்குனர் வினோத் ராஜ் ஏற்கனவே கூழாங்கல் என்ற படத்தை இயக்கினார்.
தற்போது சூரியினை வைத்து கொட்டுக்காளி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கண்டிப்பாக கொட்டுக்காளி திரைப்படம் சூரியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். கடந்த சில நாட்களுக்கு முன்பு 74-ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படமும் திரையிட தேர்வானது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…