அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் உலகக் கோப்பையுடன் அங்குள்ள அனுமன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். மது அருந்தி கொண்டாடுவதற்குப் பதிலாக, பாரம்பரிய முறைப்படி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்த வீரர்களைப் பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்தச் செயலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான கீர்த்தி ஆசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகப் பதிவில் சூர்யகுமார் யாதவின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள கீர்த்தி ஆசாத், இந்தியக் கிரிக்கெட் அணி என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரியது அல்ல, அது அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய அணி என்று சுட்டிக்காட்டியுள்ளார். உலகக் கோப்பை என்பது இந்திய நாட்டின் ஒட்டுமொத்த சொத்து என்றும், அதை ஒரு குறிப்பிட்ட மத இடத்திற்கு மட்டும் ஏன் எடுத்துச் சென்றார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சூர்யகுமார் யாதவ் அல்லது ஜெய் ஷாவின் குடும்பத்திற்கு மட்டும் இந்தக் கோப்பை சொந்தமானது அல்ல என்பதை அவர் தனது பதிவில் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், 1983 உலகக் கோப்பை வெற்றியை நினைவுகூர்ந்த ஆசாத், அந்த அணியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த வீரர்கள் இருந்ததாகவும், அது ஒரு தேசிய சாதனையாகவே கொண்டாடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். “இந்த வெற்றியில் முக்கியப் பங்காற்றிய முகமது சிராஜ் மசூதிக்கோ அல்லது சஞ்சு சாம்சன் தேவாலயத்திற்கோ ஏன் கோப்பையை எடுத்துச் செல்லவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இது ஒரு மதத்தின் வெற்றி அல்ல, ஒவ்வொரு இந்தியரின் நம்பிக்கையும் வெற்றியும் ஆகும் என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…