அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனக்கு பணியாத நாடுகளின் தலைவர்களைக் குறிவைத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவைக் கைது செய்தது மற்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவரை நீக்கியது போன்ற செயல்கள், டிரம்பின் ஆக்ரோஷமான வெளிநாட்டுக் கொள்கையை வெளிப்படுத்துகின்றன. இந்த சூழலில், டிரம்பின் அடுத்த இலக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தானா என்ற விவாதம் உலகளவில் எழுந்துள்ளது.
டிரம்பின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையானது, எதிரி நாடுகளின் தலைவர்களைப் பதவியிலிருந்து அகற்றும் ‘டிகாபிடேஷன்’ (Decapitation) யுத்தியைச் சார்ந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஈரானையும் வெனிசுலாவையும் கையாண்ட அதே பாணியில், வடகொரியாவையும் டிரம்ப் அணுகக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், இணையதளங்களில் கிம் ஜாங் உன் குறித்த மீம்ஸ்கள் மற்றும் விவாதங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
வடகொரியாவைப் பொறுத்தவரை, அது நீண்டகாலமாகவே அமெரிக்காவின் தீவிர எதிரியாக இருந்து வருகிறது. தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களும், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஏவுகணைச் சோதனைகளும் வடகொரியாவை அமெரிக்காவின் நேரடிப் பார்வையில் வைத்துள்ளன. தென்கொரியாவைப் பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் அங்கு வலுவாக உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு எப்போதும் பதற்றத்துடனேயே காணப்படுகிறது.
உலகின் மிக சக்திவாய்ந்த தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் டிரம்ப், தமக்குக் கீழ்ப்படியாத நாடுகளை வன்முறையாகவோ அல்லது பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மூலமாகவோ முடக்கத் துடிக்கிறார். சீனா மற்றும் ரஷ்யாவுடன் மட்டுமே நெருக்கம் காட்டும் கிம் ஜாங் உன், அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பணியாமல் அணுகுண்டு போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்களை ஏந்தி நிற்பது நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்த அதிகாரப் போட்டி, வரும் நாட்களில் வடகொரியா விவகாரத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…