புதுச்சேரியின் அரசியல் களம் தற்போது அதிரடி மாற்றங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் சந்தித்து வருகிறது. என்.டி.ஏ (NDA) மற்றும் திமுக-காங்கிரஸ் ஆகிய இரு முக்கியக் கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறிகள் நீடித்து வரும் நிலையில், முக்கியப் புள்ளிகளின் கட்சித் தாவல்கள் பரபரப்பை கூட்டியுள்ளன. முன்னாள் சபாநாயகரின் மகன் விக்னேஷ் கண்ணன் மற்றும் திருபுவனை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ள நிலையில், ஆளும் என்.டி.ஏ தரப்பில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, என்.டி.ஏ கூட்டணியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல்களால், பாஜக அமைச்சர் ஜான்குமார் மற்றும் அவரது மகனான எம்.எல்.ஏ ரிச்சர்டு ஆகியோர் லோக் ஜனசக்தி (LJK) கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த திடீர் அரசியல் நகர்வுகள் வரவிருக்கும் தேர்தலில் கூட்டணிகளின் பலத்தை மாற்றி அமைப்பதுடன், புதுச்சேரி அரசியலில் புதிய அதிகாரப் போட்டியை உருவாக்கியுள்ளன.
வி.எஸ். பாபு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்…
தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான கிரிபாலா சிங்கின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தமிழக அரசியல் களத்தில் இதுவரை கேள்விப்பட்டிராத 'குதிரை பேரம்' என்ற சொல், தற்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து அரசியல் சூட்டை அதிகரிக்கச்…
தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு அரசு சமீபத்தில் அறிவித்த அகவிலைப்படி உயர்வுத் தொகை, தற்போது ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக…
ரஷியாவின் வதுலினோ விமான நிலையத்தில் நடைபெற்ற ‘விா்போர்ட் ஃபோர்சஸ் டே’ கொண்டாட்டங்களின் போது ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. சோவியத்…