#image_title
தமிழ் சினிமாவில் இருக்கும் திறமை மிகு நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். தன்னுடைய ஒரு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் அவரிடம் இருக்கும் சில பிரச்சனைகள் காரணமாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்காமல் சிக்கல்களை உருவாக்கிக் கொள்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் மீது பல புகார்கள் எழுந்தன. அவர் சரியாக படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் எனவும் டப்பிங்கிற்கு கூட வர மறுக்கிறார் எனவும் தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர். குறிப்பாக அவரை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் சிம்புவின் குற்றச்சாட்டு வைத்து அவருக்கு ரெட் கார்ட் போடும் அளவுக்கு சென்றது. இன்னும் அந்த பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.
இந்நிலையில் சிம்புவை வைத்து கெட்டவன் என்ற படத்தை இயக்க இருந்த ஜி டி நந்து அந்த படம் கிடப்பில் போடப்பட்டதால் சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அந்த படம் அவர் கைவிட்டுப் போனதால் அவரால் இன்றுவரை இயக்குனர் ஆகமுடியவில்லை.
இந்நிலையில் தனக்கு நடந்தது போலவே விக்னேஷ் சிவனுக்கும் சிம்புவினால் பல தொல்லைகள் தரப்பட்டன என அவர் கூறியுள்ளார். அதில் “போடா போடி படம் ஆரம்பித்து பாதி முடிந்த போதே பட்ஜெட் அதிகமாகிவிட்டது. விக்னேஷ் சிவனுக்கு படம் எடுக்கத் தெரியவில்லை என சிம்பு தரப்பில் இருந்து டார்ச்சர் செய்ய ஆரம்பித்தனர். அதனால் படத்தை விட்டே விலகிவிட போவதாக அவர் என்னிடம் சொன்னார்.
நான்தான் அவரிடம் அப்படியெல்லாம் செய்யாதே. எப்படியாவது படத்தை முடித்துவிடு. இல்லையென்றால் உன்னால் அதன் பிறகு இயக்குனரே ஆகமுடியாது எனக் கூறினேன். அதன் பின்னர் போலீஸாக இருந்த விக்னேஷ் சிவனின் அம்மா சிம்புவிடம் பேசி அவருக்கு அட்வைஸ் செய்து மீதிப் படத்தை எடுத்து முடிக்க வைத்தார்.” எனக் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…