Categories: சினிமா

முதலில் லப்பர் பந்து படத்துல நடிக்க மாட்டேன்னு தான் சொன்னேன்.. ஆனா.. மனம் திறந்த கெத்து தினேஷ்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முதல் முறையாக லப்பர் பந்து திரைப்படத்தில் ஹீரோ அட்டகத்தி தினேஷ் கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கனா, எஃப் ஐ ஆர் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வசனம் எழுதிய வருமான தமிழரசன் பச்சமுத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் பிரபலங்கள் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. குறிப்பாக அட்டகத்தி தினேஷ், நாயகியின் அப்பா கெத்து என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ள நிலையில் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்தப் படத்தில் பல விஜயகாந்த் பாடல்கள் பயன்படுத்தப்பட்டாலும் பொன்மனச் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்ற நீ பொட்டு வெச்ச தங்க குடம் என்ற பாடல் பெரிய புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு பாடலாக உள்ளது. அதனைப் போலவே நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் இந்த திரைப்படம் ஒரு பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது.

தன்னுடைய முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.இந்த நிலையில் கெத்து தினேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், முதலில் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று தான் சொன்னேன். பத்து நிமிஷம் தான் கதையை சொன்னாரு. நாம ஏன் இந்த படத்துல நடிக்கணும்னு எனக்கு தோணுச்சு. என்கிட்ட கதை சொல்லும் போது படத்தோட டைட்டில் கூட வேற மாதிரி தான் இருந்துச்சு. ஹரிஷ் படத்துல நடிக்கிறார் என்று எனக்கு தெரியாது. ரெண்டு பேர் கிரவுண்ட்ல இருக்கும்போது எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன். அப்புறம் தான் சொன்னாரு டைட்டில் உங்க பேர்ல தான் இருக்கும் நீங்க தான் அங்க மெயின் ஹீரோ என்று சொன்னாரு.

நீங்கதான் எப்படியாவது பண்ணி கொடுக்கணும் நீங்க பண்ணா தான் அந்த இடத்தில் நல்லா இருக்கும் என்று உரிமையோடு என்கிட்ட சொன்னாரு. என்கிட்ட அவர் பேசும்போது அந்த அளவுக்கு அன்பு இருந்துச்சு. அவர் அப்படி பேசறத பார்த்து என்னால மறுப்பு தெரிவிக்கவே முடியல. அப்புறம் தான் நான் படத்துல நடிக்கிறேன் என்று சொல்லி நடிச்சு முடிச்சேன். கொஞ்ச காலமாக எந்த பட வாய்ப்பு இல்லாததால மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் போது ஒரு நல்ல தரமான படத்துல நடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் எந்த படத்தில் நடித்து முடித்தேன் என்று கெத்து தினேஷ் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

4 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

6 minutes ago

“ஈரானை விடமாட்டோம்!”: கடல்புறமாக வளைத்துப்பிடித்த அமெரிக்கா… உயிர்ச் சேதங்கள் மோசமாக இருக்கும்”… வல்லுநர்கள் எச்சரிக்கும் 2026-ன் மிகப்பெரிய வளைகுடா போர்?…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…

8 minutes ago

“தப்பிக்க 3 செகண்ட் தான் இருந்தது” என் கண் முன்னே சாம்பலாகி போயிட்டாங்க… திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிர் பிழைத்தவர் பகீர் வாக்குமூலம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…

9 minutes ago

ஈரானின் ‘மரணப் பொறி’..? கடல் கண்ணிவெடிகளுக்கு நடுவே சிக்கிய கப்பல்கள் – மீட்க களமிறங்கும் IMO… உலகத்தையே உலுக்கும் கப்பல் போக்குவரத்து நெருக்கடி…!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…

11 minutes ago

அலெர்ட்..! கோடை வெயிலில் தவறியும் “பாராசிட்டமால்” மாத்திரை போடாதீங்க… பொதுச் சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…

14 minutes ago